வேலை வழிகாட்டி: திருவனந்தபுரம் ISRO-ல் பல்வேறு பணிகள்

திருவனந்தபுரம் ISRO-ல் உள்ள திரவ இயக்க எரிபொருள் மையத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Update: 2021-09-01 16:16 GMT

திருவனந்தபுரம் ISRO-ல் உள்ள திரவ இயக்க எரிபொருள் மையத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Heavy Vehicle Driver 'A'

காலியிடங்கள்: 2 (SC-1, EWS-1)

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஒட்டுநர் உரிமம் மற்றும் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Light Vehicle Driver 'A'

காலியிடங்கள்: 2 (UR-1, OBC−1)

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்; ரூ.19,900 - 63,200

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனத்துக்குரிய ஒட்டுநர் உரிமம், மற்றும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Cook

காலியிடங்கள்: 2 (UR)

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Fireman 'A'

காலியிடங்கள்: 2 (UR)

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: Catering Attendant 'A'

காலியிடம்: 1 (OBC)

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.18,000 - 56,900

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/ ST/PWD/OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.lpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை (Advt. No.: LPSC/02/2021) முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://www.lpsc.gov.in

ஆன்லைனில் 6.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News