வேலை வழிகாட்டி: தமிழக அரசின் நீர்வளத்துறையில் பல்வேறு பணிகள்
தமிழக அரசின் நீர்வளத் துறையால் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் திட்டப் பணிக்கு காலியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் நீர்வளத் துறையால் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் திட்டப் பணிக்கு காலியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இதுகுறித்த விபரங்களவான :
1. பணியின் பெயர்: Procurement Specialist.
காலியிடம்: 1
சம்பளம்: 1,00,000.
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் BE தேர்ச்சியுடன் MBA முடித்திருக்க வேண்டும். அல்லது ME முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறையில் 12 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Environmental Specialist
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.1,00,000/
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் BE தேர்ச்சியுடன் MBA முடித்திருக்க வேண்டும் அல்லது ME அல்லது M.Sc (Environmental) முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறையில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Social Specialist
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.80,000/
கல்வித்தகுதி: M.S.W. அல்லது M.A (Social) படிப்புடன் M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுமானத் துறையில் நிகழும் சமூகப் பாதிப்பு தடுப்புப் பணியில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர்: Financial Specialist.
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.80,000/
கல்வித்தகுதி: M.Com அல்லது MBA (Finance) அல்லது CA அல்லது I.C.W.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்டப் பணியில் 10வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 30.11.2021 தேதியின்படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய முழுமையான தன் விபர பட்டியலை (பயோடேட்டா) தயார் செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்:
The Superintending Engineer, Water Resources Department,
Lower Cauvery Basin, Santhapillai Gate,
Thanjavur-613 001.
Email-ID: selcbtnj@gmail.com.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.11.2021