வேலை வழிகாட்டி: இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்
10th, +2, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள் உள்ளன.;
இந்திய கடலோர காவல் படையில் Navik மற்றும் Yantric பணிகளுக்கு 350 பேர் தேவைபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இதன் விபரங்கள் வருமாறு :
நிறுவனம் : இந்திய கடலோர காவல் படை
1.பணியின் பெயர் :Navik (General Duty)
காலியிடங்கள்: 260
சம்பளம் ரூ 21,700/-
கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் :Navik (Domestic Branch)
காலியிடங்கள்: 50
சம்பளம் ரூ 21,700/-
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் :Yantric
காலியிடங்கள்: 40
சம்பளம் ரூ 29,200/-
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/Mechanical/Electronics and Telecommunication ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அனைத்து பணியிடங்களுக்கும் 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தேர்ந்தெடுக்கப் படும் முறை :
இந்திய கடலோர காவல் படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு ( Computer Based online Examination ), உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, சான்றிதல் சரிபார்த்தல், ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 ஆன்லைன் முறையில் கட்ட வேண்டும், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
காலியிட பகிர்வு, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள், உடற்தகுதி விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
www.joinindiancoastguard.cdas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும்படித்து 16-7-2021 க்கு முன்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி விபரங்கள் தேர்வுக்கு பத்து நாட்கள்முன்னதாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தங்களுடைய மெயிலுக்கு E- Admit Card அனுப்பி வைக்கப்படும் .