பொதுத்துறை வங்கிகளில் Clerk பணிக்கான IBPS தேர்வு : 7855 காலியிடங்கள்
தகுதியானவர்கள் IBPS தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.;
பொதுத்துறை வங்கிகளில் Clerk பணிக்கான 7855 காலியிடங்களை நிரப்ப IBPS தேர்வு நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: IBPS CRP CLERKS EXAM-XI 2022-23
காலியிடங்கள்: 7855
வயதுவரம்பு:
1.7.2021 தேதியின் படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3வருடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
IBPS அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துதேர்வு இரண்டு கட்டகளாக நடைபெறும்.
முதல்கட்ட எழுத்துத்தேர்வு தொடங்கும் தேதி: டிசம்பர்-2021
முக்கிய எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி/பிப்ரவரி 2022
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்கள் ஆகியோருக்கு ரூ.175/- இதர பிரிவினர்கள் ரூ.850 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: wwww.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முறையில் 27.10.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியானவர்கள் IBPS தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை wwww.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.