மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் Head Constable பணிகள்: காலியிடங்கள் 249

CISF Recruitment 2021: மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காலியாக உள்ள 249 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-04 01:56 GMT

துணை ராணுவபடைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 249 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Head Constable (Sports Quota 2021)

காலியிடங்கள்: 249

சம்பளவிகிதம்: ரூ.25,500/- to 81,100/-

வயதுவரம்பு: 1.8.2021 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்கவேண்டும். SC/ST-5 வருடங்கள், OBC-3 வருடங்கள் வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வித்தகுதி: குறைந்த பட்சம் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அட்டவணையில் உள்ளபடி காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் மாநில/ தேசிய/ சர்வதேச போட்டி களில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும். தற்போதும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். 1.1.2019 முதல் 31.3.2022 வரையிலான விளையாட்டு தகுதிகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

உடற்தகுதி:

ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 81 செ.மீ. முதல் 86 செ.மீ. அகலம் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட் சம் 153 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். ST பிரிவை சேர்ந்த ஆண்கள் 160 செ.மீ. உயரம் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி, உடற் திறன் தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படை யில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விபரம் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100. கட்டணத்தை DD/IPO-ஆக எடுத்து அனுப்ப வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை www.cisfrectt.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தரவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றுகளின் நகல்களுடன் 31.3.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக் வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள், விளையாட்டு தகுதி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

Notification Link

இந்த லிங்கில் சென்று காணவும்.

Tags:    

Similar News