ஜிஎஸ்டி கணக்குகள் நிர்வாக உதவியாளர் பயிற்சி: இலவச வகுப்பு

பயிற்சி முற்றிலும் இலவசம். விண்ணப்பதாரர்களின் போக்குவரத்து செலவையும் தமிழக அரசு வழங்கும்.

Update: 2022-03-16 02:52 GMT

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் கணக்குகள் நிர்வாகம் மற்றும் ஜிஎஸ்டி கணக்குகள் நிர்வாக உதவியாளர் பயிற்சிகளுக்கான அறிமுக வகுப்பு மார்ச் 19,21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

சென்னை , அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகரில் அமைந் துள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் பயிற்சி வளாகத்தில் காலை 10:30 முதல் 12 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 3 மற்றும் 6 வார தொடர் பயிற்சிகள் பயில அனுமதிக்கப்படுவர். பயிற்சி முற்றிலும் இலவசம். விண்ணப்பதாரர்களின் போக்குவரத்து செலவையும் தமிழக அரசு வழங்கும்.

பயிற்சியைத் திறம்பட முடித்தவர்களுக்கு மாநில அரசின் சான்றிதழ்வழங்கப்படுவதோடு, அவர்கள் நல்லபணியில் சேர் வதற்கும் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும். இளநிலை பட்டம் மற்றும் பட்ட மேற் படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98690 41169 என்ற எண் அல்லது mangalyantwcs@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News