மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவ, மாணவிகளில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.8.2021

Update: 2021-08-05 17:46 GMT

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவ மாணவிகளில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கிடையே அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கப்படுத்த மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள்:

கல்வி உதவித்தொகையின் பெயர்: Kishore Vaigyanik Protsahan Yojana Fellowship (KVPY-2021)

உதவித்தொகை: மாதம் ரூ.5000/- முதல் 7000/- வரை

கல்வித்தகுதி: மாணவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, அதனடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி அடிப்படையில் 3 பிரிவுகளின் விபரங்கள் வருமாறு:

1. Stream: SA: பத்தாம் வகுப்பில் குறைந்தது 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +1-ல் அறிவியல் அல்லது கணிதப் பாடப் பிரிவில் படித்து கொண்டிருக்க வேண்டும்.

2. Stream: SX: தற்போது +2 அறிவியல் அல்லது கணிதப் பாடப் பிரிவில் படித்து கொண் டிருக்க வேண்டும். குறைந்தது 60% மதிப் பெண்களுடன் +2 தேர்ச்சி பெற வேண்டும். +2தேர்ச்சிக்கு பின் கல்லூரியில் ஏதாவது ஒரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.

3. Stream: SB: ஏதாவதொரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்பில் முதலாமாண்டு மாணவராக இருக்க வேண்டும்.

குறிப்பு: Stream SA, Stream Sx பிரிவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்து ஏதாவது ஒரு அறிவியல்/கணிதம்/புள்ளியியல் பாடப்பிரிவில் முதலாமாண்டு மாணவராக கல்லூரியில் சேர்ந்த பின்னரே உதவித் தொகை வழங்கப்படும்.


இடைப்பட்ட காலத்தில் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கல்வி மாநாடு, அறிவியல் கருத்தரங்கு ஆகியவற்றிற்கு KVPY சார்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் KVPY-Aptitude Test-க்கு அழைக்கப்படுவர்.

இந்த தேர்வு 7.11.2021 அன்று ஆன்லைன் முறையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர்கள் ரூ.1250/-

SC/ST மற்றும் மாற்று திறனாளிகள் ரூ. 625 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.8.2021

விண்ணப்பிக்கும்முறை:

இது பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொள்ளவும் , இணையவழியில் விண்ணப்பம் செய்யவும், மேலும் முழுவிபரங்களை அறிந்து  கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணையதளத்தின் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகார பூர்வ இணையதள லிங்க்: http://kvpy.iisc.ac.in

அதிகார பூர்வ அறிவிப்பை காண லிங்க் : http://kvpy.iisc.ac.in

Tags:    

Similar News