மைசூர்: உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்

உணவுதொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் Junior Secretariat Assistant, Junior Stenographer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-07-14 14:27 GMT

மைசூரிலுள்ள உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மைய மையத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதன் விபரங்கள் :

1.பணியின் பெயர் : Junior Secretariat Assistant (Gen.)

காலியிடங்கள்: 3 ( SC-1, UR-2)

சம்பளம்: Level 1-2 ( 19,900. 63,200)

வயது வரம்பு : 28 years

2.பணியின் பெயர்: : Junior Secretariat Assistant (F & A)

காலியிடங்கள்: 3 ( SC-1, UR-2)

சம்பளம்: Level 1-2 ( 19,900. 63,200)

வயது வரம்பு : 28 years

3.பணியின் பெயர்: : Junior Secretariat Assistant ( S & P)

காலியிடங்கள்: 3 ( UR )

சம்பளம்: Level 1-2 ( 19,900. 63,200)

வயது வரம்பு : 28 years

4.பணியின் பெயர்: Junior Stenographer

காலியிடங்கள்: 3 (Backlog) ( ST-1, OBC-1, PwBD (OH)-1)

சம்பளம்: Level 1-4 ( 25,500. 81,100)

வயது வரம்பு : 27 years

( குறிப்பு: 30-07-2021 தேதியில் மேற்கண்ட வயது வரம்பு நிறைவடைந்திருக்க வேண்டும் )

கல்வித் தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும், அல்லது நிமிடத்திற்கு 30 ஹிந்தி வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் ஸ்டெனோகிராபர் Junior Stenographer பணிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் சுருக்கெழுத்தில் எழுதியதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்-லைன் வழி எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் பணி புரியும் திறன், தட்டச்சு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார். Junior Stenographer (ஜூனியர் ஸ்டெனோகிராபர்) பணிக்கு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் General Awareness, English, Language, Mental Ability Test போன்றவற்றில் இருந்து கேள்வி கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/- இதனை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.cftri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30-7-2021.

ஆன்லைனில் விண்ணப்பித்த உடன் அதை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களை நகலெடுத்து அத்துடன் இணைத்து 23-8-2021 க்கு முன் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

Tags:    

Similar News