மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் 3,847 பணியிடங்கள்

மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் 3,847 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2022-01-10 07:30 GMT

மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) மேல் பிரிவு கிளார்க் (யுடிசி), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3847 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேசம்: UDC- 07, ஸ்டெனோ- 2, எம்.டி.எஸ்- 26

பீகார்: UDC-43, ஸ்டெனோ-16, எம்.டி.எஸ்-37

சத்தீஸ்கர்:UDC- 17, ஸ்டெனோ-03, எம்.டி.எஸ்-21

டெல்லி: UDC-235, ஸ்டெனோ-30, எம்.டி.எஸ்-292

கோவா: UDC-13, ஸ்டெனோ- 01, எம்.டி.எஸ்-12

அகமதாபாத்:UDC- 136,ஸ்டெனோ- 06, எம்.டி.எஸ்-127

ஜம்மு காஷ்மீர்: UDC-08, ஸ்டெனோ-01, 

ஹரியானா: UDC-96, ஸ்டெனோ-13, எம்.டி.எஸ்-76

ஹிமாச்சல பிரதேசம்: UDC-29,எம்.டி.எஸ்-15

ஜார்கண்ட்: UDC-06,எம்.டி.எஸ்-  26

கர்நாடகா:UDC- 199, ஸ்டெனோ-18,எம்.டி.எஸ்- 65

கேரளா: UDC-66, ஸ்டெனோ-04, எம்.டி.எஸ்-60

மத்திய பிரதேசம்:UDC- 44, ஸ்டெனோ-02,எம்.டி.எஸ்- 56

மகாராஷ்டிரா:UDC- 318,ஸ்டெனோ- 18, எம்.டி.எஸ்-258

வடகிழக்கு: UDC-01,  எம்.டி.எஸ்-17

ஒடிசா: UDC-30,ஸ்டெனோ- 03, எம்.டி.எஸ்-41

புதுச்சேரி: UDC-06,ஸ்டெனோ- 01,எம்.டி.எஸ்- 07

பஞ்சாப்: UDC-81, ஸ்டெனோ-02, எம்.டி.எஸ்-105

ராஜஸ்தான்: UDC-67, ஸ்டெனோ-15, எம்.டி.எஸ்-105

தமிழ்நாடு: UDC-150, ஸ்டெனோ-16,எம்.டி.எஸ்- 219

தெலுங்கானா: UDC-25,ஸ்டெனோ- 04, எம்.டி.எஸ்-43

உத்தரப்பிரதேசம்: UDC-36, ஸ்டெனோ-05,எம்.டி.எஸ்- 119

உத்தரகாண்ட்: UDC-09, ஸ்டெனோ-01,எம்.டி.எஸ்-17

மேற்கு வங்காளம்: UDC-113, ஸ்டெனோ-04, எம்.டி.எஸ்-203

மொத்தம்: 3847, UDC-1735, ஸ்டெனோ-165, எம்.டி.எஸ்-1947

கல்வித் தகுதி:

ஸ்டெனோகிராஃபருக்கு: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேல் பிரிவு எழுத்தர் (UDC): விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கு (எம்டிஎஸ்): விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

UDC மற்றும் ஸ்டெனோ- 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகள் வரை

எம்.டி.எஸ் -18 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள்/முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 செலுத்த வேண்டும். பிற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

UDC பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு நடைபெறும். ஸ்டெனோகிராஃபருக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு, MTS க்கு  முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, https://www.esic.nic.in/recruitments என்ற இணையதள முகவரியில் சென்று 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 15ம் தேதி ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.esic.nic.in/recruitments இணையத்தில் தெரிந்துகொள்ளலாம். 

Tags:    

Similar News