மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு : 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக மருத்துவ வாரியத்தில் வேலை செய்ய 10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள வெல்டர், எலக்ட்ரீசியன் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 15.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரீசியன்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 62,000
வெல்டர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வெல்டர் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 62,000
வயதுத் வரம்பு : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 40%க்கும், ஐடிஐ மதிப்பெண்கள் 60%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 250
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிலாம்.
எலக்ட்ரீசியன்: http://www.mrb.tn.gov.in/pdf/2021/Electrician_Grade%20_II_Notification_29_10_2021.pdf
வெல்டர்: http://www.mrb.tn.gov.in/pdf/2021/Welder_Grade%20_II_Notification_29_10_2021.pdf