இந்திய கடற்படையில் Electrical Engineer பணிகள்: காலியிடங்கள்- 40

இந்திய கடற்படையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிய ஆர்வமும் தகுதியும் உள்ள, திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Update: 2021-07-24 19:46 GMT

இந்திய கடற்படையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிய ஆர்வமும் தகுதியும் உள்ள, திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Electrical Engineer (SSC-Electrical Branch)

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 2.1.1997 லிருந்து 1.7.2002- க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Electrical/Elec-tronics/Telecommunication/ Electronics & Communication/ Power Engineering/Power Elec tronics/Electronics & Instru mentation/Applied Electronics போன்ற ஏதாவதொரு பாடப் கடற்ப பிரிவில் குறைந்தது 60% மதிப் பெண்களுடன் BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண் டும். NCC பயிற்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

BE/B.Tech. படிப்பில் பெற் றுள்ள மதிப்பெண்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளால் நடத்தப்படும் SSB Interview மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

SSB Interview நடைபெறும் நாள்: 21.9.2021.

நடைபெறும் இடங்கள்: பெங்களூர், போபால், விசா கப்பட்டினம், கொல்கத்தா.

நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 22 வாரங்கள் கடற்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணிக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி ஜனவரி 2022-ல் ஆரம்பமாகும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்:

Indian Naval Academy,

Ezhimala, Kerala.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழி யாக 30.7.2021 தேதிக்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News