விளையாட்டு வீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிகள்
விளையாட்டு வீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிகள்: மொத்த காலியிடங்கள் 269;
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்புப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பதவிக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
விளையாட்டின் பெயர் மற்றும் காலியிட விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்
1.விளையாட்டின் பெயர்: Boxing
காலியிடங்கள்: 10 (Men); 10 (Women)
2.விளையாட்டின் பெயர்: Judo
காலியிடங்கள்: 8 (Men); 8 (Women)
3.விளையாட்டின் பெயர்: Swimming
காலியிடங்கள்: 12 (Men); 4 (Women)
4.விளையாட்டின் பெயர்: Cross Country
காலியிடங்கள்: 2 (Men); 2 (Women)
5. விளையாட்டின் பெயர்: Kabaddi
காலியிடங்கள்: 10 (Men)
6.விளையாட்டின் பெயர்: Water Sports
காலியிடங்கள்: 10 (Men); 6 (Women)
7.விளையாட்டின் பெயர்: Wushu
காலியிடங்கள்: 11 (Men)
8. விளையாட்டின் பெயர்: Gymnastics
காலியிடங்கள்: 8 (Men)
9.விளையாட்டின் பெயர்: Hockey
காலியிடங்கள்: 8 (Men)
10.விளையாட்டின் பெயர்: Weight Lifting
காலியிடங்கள்: 8 (Men); 9 (Women)
11. விளையாட்டின் பெயர்: Volley Ball
காலியிடங்கள்: 10 (Men)
12.விளையாட்டின் பெயர்: Wrestling
காலியிடங்கள்: 12 (Men); 10 (Women)
13. விளையாட்டின் பெயர்: Hand Ballan
காலியிடங்கள்: 8 (Men)
14. விளையாட்டின் பெயர்: Body Building
காலியிடங்கள்: 6 (Men)
15. விளையாட்டின் பெயர்: Archery
காலியிடங்கள்: 8 (Men); 12 (Women)
16. விளையாட்டின் பெயர்: Tae-Kwondo
காலியிடங்கள்: 10 (Men)
17. விளையாட்டின் பெயர்: Athletics
காலியிடங்கள்: 20 (Men); 25 (Women)
18. விளையாட்டின் பெயர்: Equestrian
காலியிடங்கள்: 2 (Men)
19.விளையாட்டின் பெயர்: Shooting
காலியிடங்கள்: 3 (Men); 3 (Women)
20. விளையாட்டின் பெயர்: Basketball
காலியிடங்கள்: 6 (Men)
21.விளையாட்டின் பெயர்: Football
காலியிடங்கள்: 8 (Men)
மேற்கண்ட அனைத்து விளையாட்டு பிரிவுகளுக்கான வயதுவரம்பு, சம்பள விகிதம், கல்வித்தகுதி குறித்த விபரம் வருமாறு:
வயதுவரம்பு: 1.8.2021தேதியின்படி 18-லிருந்து 23 வயதிற்குள்ளிருக்க வேண்டும். சம்பளவிகிதம்: ரூ.21,700 69,100
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விளையாட்டு தகுதிகள் காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய அளவில்/மாநில அளவில் அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகள் ஏதாவதொன்றில் ஜூனியர் அல்லது சீனியர் பிரிவில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும். பதக்கங்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. விளையாட்டு உட்பிரிவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும். இது குறித்த முழுமையான விபரங்களுக்கு அதிகார பூர்வமான இணையதளத்தின் அறிவிப்பு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை முழுவதும் கவனமாக படியுங்கள்.
உடற்தகுதிகள் உயரம்: 170 செ.மீ. (ஆண்); 157 செ.மீ. (பெண்கள்)
மார்பளவு: ஆண்கள் 80 செ.மீ. (5 செ.மீ. விரிவடை யும் தன்மை பெற்றிருக்க வேண்டும்).
எடை: உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும்முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் உடற் திறன் தகுதி உடற்தகுதி மற்றும் விளையாட்டு பிரிவில் பெற்ற தகுதிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விபரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்க்க
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://rectt.bsf.gov.in
www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்யுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.9.2021.