இந்திய விமானப்படையில் குரூப் 'சி' சிவிலியன் பணிகள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். 24.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Update: 2021-11-11 17:20 GMT

கோப்பு படம்

இந்திய விமானப்படையில் குரூப் 'C' காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Superintendent (Store)

காலியிடம் - 1

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Lower Division Clerk (LDC)

காலியிடம் - 12

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந் திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Cook

காலியிடம் - 5

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering துறையில் ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Carpenter

காலியிடம் -1

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter பிரி வில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Multi Tasking Staff

காலியிடம் - 17

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


6. பணியின் பெயர்: Civilian Mechanical Transport Driver

காலியிடம் - 45

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற் றிருக்க வேண்டும். மேலும் வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்ய தெரிந் திருக்க வேண்டும்.


7. பணியின் பெயர்: Fireman

காலியிடம் - 1

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.


உடற்தகுதி விபரம்:

1.உயரம்: 165 செ.மீ. (ST) பிரிவினருக்கு 162.5 செ.மீ.)

2. மார்பளவு : சுருங்கிய நிலையில் 81.5 செ.மீ. இருக்க வேண்டும். விரிவடைந்த நிலை யில் 85 செ.மீ. இருக்க வேண்டும்.

3. உடல் எடை: குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: 2.7 மீட்டர் நீளம் தாண்டும் திறன், 3 மீட்டர் செங்குத்தாக கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 63.5 கிலோ எடை உள்ள மனிதனை சுமந்து கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் ஓட வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்குமான வயது வரம்பு மற்றும் சம்பளவிகித விபரங்கள்:

வயதுவரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவி னருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கான கேள்விகள் பணிக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலும் முழு விபரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்குங்கள்:http://www.davp.nic.in

இணைப்பில் முழு விபரங்களுடன் விண்ணப்ப படிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, அதைப் பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் 5 நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 24.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News