கோவிட்–19 தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு..

கோவிட்–19 தொடர்பான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Update: 2021-06-01 10:55 GMT

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகத்தின் கிசான் விகாஸ் யோஜனா பயிற்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம், சுகாதாரத்துறையில் கோவிட்–19 தொடர்பான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

குறுகிய கால பயிற்சியில், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன், ஜெனரல் டூட்டி அசிஸ்டன்ட், ஜி.டி.ஏ., அட்வான்ஸ்டு – கிரிட்டிக்கல் கேர், மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டண்ட், பிளிபோடோமிஸ்ட் பயிற்சி வழங்கப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி., – பிளஸ் 2 தேர்ச்சி, அதற்கு மேல் மூன்று முதல் ஐந்தாண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள், டிப்ளமோ இன் டெக்னிக்கல் சப்ஜெக்ட், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புடைய படிப்பு முடித்தவர்கள் சேரலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர், தங்கள் பெயர், கல்வி தகுதி, முகவரி, தொலைபேசி எண், இ–மெயில் முகவரியை, https://tinyurl.com/ekavkz27 இணைய தள இணைப்பில் பதிய வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 94424 94266, 94430 72649, 94433 84133, 94990 55702 எண்ணில் அறியலாம்.

Tags:    

Similar News