COAL INDIA பொதுத்துறை நிறுவனத்தில் BE/B.Tech./M.Sc. தகுதிக்கு வேலை: காலியிடங்கள் 588

GATE-2021 மதிப்பெண்களின் அடிப்படையில் BE/B.Tech./M.Sc பட்டதாரிகள் Management Trainee பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Update: 2021-08-22 05:21 GMT

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) பொதுத்துறை நிறுவனம். இந்தியாவில் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 8 மாகாணங்களில் 85 சுரங்கப் பகுதிகளில், 345 சுரங்கங்களை இயக்குகிறது.

கேட் -2021 மதிப்பெண்களின் அடிப்படையில் BE/B.Tech./M.Sc பட்டதாரிகளுக்கு Management Trainee பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மொத்த காலியிடங்கள் 588.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Management Trainee

காலியிடங்கள்: 588

பொறியியல் பாட வாரியான காலியிட விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது


சம்பளவிகிதம்: ரூ.60,000 முதல் 1,80,000

வயது: 4.8.2021 தேதியின் படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

பாடப் பிரிவு வாரியாக காலியிட விபரங்கள்

கல்வித்தகுதி:

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று BE/ B.Tech./B.Sc. (Engineering) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Geology பிரிவிற்கு குறைந்தது 60% மதிப்பெண்களுடன் M.Sc./M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Applied GeoPhysics பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகள் விபரங்கள் 

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை யில் தகுதியானவர்கள் நேர்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.coalindia.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய இந்த  லிங்கை கிளிக் செய்யுங்கள் :https://www.coalindia.in   இந்த லிங்கில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.9.2021 

Tags:    

Similar News