BE/B.Tech. படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் Assistant Commandant பணிகள்

இந்திய கடலோர காவல்படையில் BE/B.Tech. படித்தவர்களுக்கு காலி பணியிடங்கள் உள்ளன. ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Update: 2021-07-09 08:59 GMT

இந்திய கடலோர காவல்படையில் BE/B.Tech. படித்தவர்கள் Assistant Commandant பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். அதன் விபரங்கள்:

பணியின் பெயர் : Assistant Commandant ( General Duty )

காலியிடங்கள் : 40. ( SC-6, ST-13, OBC-7, EWS-3, UR-11)

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 60 % மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

2.பணியின் பெயர்: Assistant Commandant ( Technical )

காலியிடங்கள் : 10( SC-2, ST-1, OBC-4, UR-3)

கல்வித்தகுதி :

Electrical/ Electronics & Communication / Power Electronics/ Mechanical/ Automobile /Naval Architecture/ Marine Mechanics போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் பிளஸ் 2 முதல் BE/B.Tech. வரை குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது : 1.7.1997 க்கும் 3௦.6.2001 இடைப்பட்ட காலக் கட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

கடலோர காவல் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார். FBS என அழைக்கப்படும் இத் தேர்வுக்கான Admit Card –ஐ ஜூலை 20 ம் தேதிக்குள் தரவிறக்கம் செய்து கொள்ளவும், FBS தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு கடலோர காவல் படையால் இலவச உணவு, தங்குமிட வசதி, மற்றும் ரயில் பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

www.joinindiancostguard.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 14.7.2021 க்கு முன் விண்ணப்பம் செய்யலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை, சம்பளம், வயது வரம்பு சலுகைகள் போன்ற கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவலை முழுவதும் கவனமாக படித்து பார்த்து விண்ணப்பம் செய்யவும்.

Tags:    

Similar News