டில்லி அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை பொறியாளர் பணிகள்: காலியிடங்கள் 691
பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.;
டில்லி அரசின் வடக்கு, தெற்கு, கிழக்கு நகராட்சி அலுவலகம், விவசாய மார்க்கெட்டிங்க் போர்டு, போக்குவரத்துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (சிவில், எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரங்கள் :
பணியின் பெயர்: Junior Engineer (Civil/Electrical)
காலியிடங்கள்: 691
காலியிட விபரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளவிகிதம்: ரூ.9300 - 34,800
வயதுவரம்பு: 18 முதல் 27 வயது வரை.
தகுதி :
பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
Delhi Subordinate Services Selection Board (DSSSB) ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி இ-பே மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு
அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://dsssb.delhi.gov.in
ஆன்லைனில் விண்ணக்க கடைசி தேதி : 09.02.2022