8ம் வகுப்பு தேர்ச்சி: மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணி
கடைசி நாள் : ஜனவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.;
சென்னை மண்டல மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் பொதுப்போட்டி மூலம் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது விபரம் :
ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு 18 முதல் 37 வயது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 18 முதல் 34, இதர வகுப்பினருக்கு 18 முதல் 32 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள் :
வரும் ஜனவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, இணை இயக்குநர் (மண்டலம்) அலுவலகம், சென்னை'