ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும், மொத்த காலியிடங்கள்: 1785;
தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்களாவன:
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 1785
வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்ற வர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் விபரம் வருமாறு:
Mechanic (Diesel), Fitter, Electrician, Carpenter, Motor Mechanic, Welder (Gas & Electric), Painter, Machinist, Turner, Wireman, Air Conditioning, Line man, Crane Operator, Cable Jointer, Winder (Armature) MMTM (Machine & Tool)
தேர்வு செய்யப்படும் முறை:
10-ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
SC/ ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www. rrcser.co.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் முறை யில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.12.2021
பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள், காலியிட விபரங்கள், மற்றும் விண்ணப்பிக்கும் தகுதிகள் என முழு விபரங்களையும் காண இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.rrcser.co.in
மேலே குறிப்பிட்ட இணைப்பில் உள்ள அதிகாரபூரவமான அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.