இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி

ITI/ Diploma/பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி, காலியிடங்கள்: 527.

Update: 2021-11-22 05:00 GMT

பொதுத்துறை நிறுவனமான IOCL- நிறுவனத்தில் ITI/ Diploma/பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்கள், ஒரு வருடத்திற்கும் அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள், படிப்பை முடித்து 3 வருடம் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பயிற்சியின் பெயர்:

1.Trade Apprentice

2. Technician Apprentice

மொத்த காலியிடங்கள்: 527

டிரேடு வாரியாக காலியிட விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி: Trade Apprentice:

10-ம்வகுப்பு தேர்ச்சியுடன் Fitter/ Electrician/Electronic Mechanic/ Instrument Mechanic/Machinist/ Electrical போன்ற ஏதாவது ஒரு டிரேடில் ITI படித்திருக்க வேண்டும்.

Data Entry Operator/Retail Sales Associate- டிரேடில் பயிற்சி பெற +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accountant-டிரேடில் பயிற்சி பெற Accountancy பாடப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice: 10-LD வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical/Electrical/Instrumentation/Civil/Electronics/Electrical & Electronics போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.10.2021 தேதியின்படி 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். SC/ ST/OBC/PWD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

IOCL - ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற் சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சியானது Data Entry Operator-க்கு 15 மாதங்களும், Retail Sales Associate-க்கு 14 மாதங்களும் வழங்கப்படும். ITI மற்றும் Diploma படித்தவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.iocl.com/careers/ apprenticeship என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைன் முறையில் 4.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு 19.12.2021 அன்று நடைபெறும். தேர்விற்கான அட்மிட் கார்டை 9.12.2021 தேதிக்கு பிறகு இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.

முக்கிய தேதி விபரங்கள்:


மேலும் விண்ணபிக்க முழு விபரங்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: https://iocl.com

Tags:    

Similar News