இந்திய ராணுவப் பள்ளிகளில் 8,700 ஆசிரியர் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தின் 137 பள்ளிகளில் 8,700 பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-19 02:30 GMT

ராணுவ நலக் கல்விச் சங்கம் (AWES) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ராணுவ நிலையங்களில் உள்ள 137 பொதுப் பள்ளிகளில் (APS) பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதன்மை பயிற்சி பெற்ற ஆசிரியர் (PRT), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT), முதுகலை ஆசிரியர் (PGT) ஆகிய  மொத்தம் 8,700 ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

வயது:

புதியவர்கள்: 40 வயது வரை

NCR பள்ளி TGT, PRT: 29 வயது வரை

PGT: 36 வயது வரை

அனுபவம் வாய்ந்தவர்கள்: 57 வயது வரை

கல்வி தகுதி:

PGT:  B.Ed தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TGT: B.Ed தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

PRT: B.Ed அல்லது இரண்டு வருட டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.385 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

கடைசி தேதி:   28.01.2022

ஹால் டிக்கெட்: 10.02.2022

தேர்வு தேதி: 19.02.2022 மற்றும் 20.02.2022

தேர்வு முடிவுகள்: 28.02.2022

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://register.cbtexams.in/AWES/Registration/Applicant/Register என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Gx1Qgn_SDY8AiNS_9x8zppC-RnPm9kPA/view என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

Tags:    

Similar News