தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் முகாம்

Voter ID Name Correction -தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Update: 2022-10-28 10:56 GMT

வாக்காளர் பட்டியல். கோப்பு படம்.

Voter ID Name Correction -உலகில்  மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக மக்கள் தொகை பெருக்கம் பற்றி2022 அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை  அறிவித்துள்ளது.அதில் நவம்பர் 12, 2022-ல் உலக மக்கள் தொகை 800 கோடியாக இருக்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2030-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும்  2050-ம் ஆண்டில் 970 கோடியாகவும் உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 2080-ம் ஆண்டில் உலகில் ஆயிரம் கோடி மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மக்கள் தொகை சுமார் 141 கோடியே 20 லட்சம்  என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. இவ்வளவு மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாதான் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்குதான் ஜனநாயக முறை படி அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன, தேர்தலும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் முழுக்க முழுக்க மின்னனு கருவி மூலம் ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.உலகிலேயே வளர்ச்சி பெற்ற நாடு, வல்லரசு என்றும் சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவில் கூட மின்னனு கருவி மூலம் வாக்குப்பதிவு முறை கிடையாது.

இந்தியாவில் தற்போது 95கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அதில் 49 கோடி ஆண் வாக்காளர்கள்.  46கோடி பெண் வாக்காளர்கள். இதில் மூத்த குடிமக்கள் மட்டும் ஒரு கோடியே 92லட்சம் பேர் உள்ளனர்.மேலும் மூன்றாம் பாலினத்தவரும் உண்டு. தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரம் ஆகும். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். இந்தியா முழுவதும் 95கோடிக்கு மேல் வாக்காளர்கள் இருந்தாலும் இதில் வாக்கு சாவடிக்கு நேரில் சென்று ஓட்டுபோடுகிறவர்கள் வெறும் 40கோடி பேர்தான் என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்திய தேர்தல் கமிஷன்  2012 ஆம் ஆண்டில் இருந்து வாக்காளர் பட்டியலில்   "மற்றவர்கள்" என குறிப்பிடப்பட்டுள்ள  பாலினம் மூலம் திருநங்கைகளும்  வாக்காளர்களாக பதிவு செய்யும் உரிமையை அளித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதன்படி புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இந்திய முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிதொட்டங்க உள்ளது. தமிழ் நாட்டில் இந்த பணிகளை கண்காணித்து செயல்படுத்த, 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளர்களாக இந்திய தேர்தல் கமிஷன்  நியமித்து இருக்கிறது.  அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியும், பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான புகார்கள் பற்றியும் அவர்கள்  ஆய்வு நடத்துவார்கள். இவர்கள் தங்கள் ஆய்வை முடித்த பிறகு, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக கொடுப்பார்கள்.  தமிழ்நாட்டுக்கு இந்த பணிகளுக்காக தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அனில் மேஷ்ராம், தொழில்வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக இயக்குநர் ஷோபனா, துணிநூல் ஆணையர் வள்ளலார், வேளாண் துறை சிறப்புசெயலர் ஆபிரகாம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக தலைவர் சிவசண்முகராஜா, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், குறு, சிறு தொழில்கள் துறை சிறப்பு செயலர் மகேஸ்வரி, நில நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையர் ஜெயந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்  தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் செய்வார்கள்.அதனால் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்களும் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News