அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.