தேசிய உர நிறுவனத்தில் 183 பணியிடங்கள்: விண்ணப்பிக்க நவ.10ம் தேதி கடைசி

தேசிய உர நிறுவனத்தில் புதிதாக 183 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-01 08:38 GMT

தேசிய உர நிறுவனத்தில்(NFL) பல்வேறு பொறியியல் பிரிவுகளின் கீழ் புதிதாக 183 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

பதவி. சம்பளம், இட ஒதுக்கீடு விபரங்கள்:




கல்வித்தகுதி மற்றும் வயது:


விண்ணப்பதாரரின் வயது 30.09.2021 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். இந்த அரசுப் பணிகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் நவம்பர் 10ம் தேதி. ஆன்லைன் விண்ணப்பம் மற்றும்  விபரங்களுக்கு https://nfl.onlineregistrationforms.com/#/home என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம். 

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC/EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி  / எஸ்டி / PwBD / ExSM / துறைசார் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணங்களை இணைய வங்கி கணக்கு அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

என்எப்எல் துறையால் நடத்தப்படும் ஆன்லைன் ஆப்ஜெக்டிவ் தேர்வில், செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Tags:    

Similar News