10th/ITI படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads நிறுவனத்தில் வேலை

10th/ITI படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads நிறுவனத்தில் வேலை. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2022

Update: 2021-12-26 06:34 GMT

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads Organisation நிறுவனத்தின் எல்லைபுற சாலை அமைப்பு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விபரம் அட்டவணையில்


இதுபற்றிய விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Multi Skilled Worker (Painter)

காலியிடங்கள்: 33

சம்பளவிகிதம்: ரூ.18,000/- 56,900/-

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Painting பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Multi Skilled Worker (Mess Waiter)

காலியிடங்கள்: 12 சம்பளவிகிதம்: ரூ.18,000/- 56,900/-

வயதுவரம்பு: 18 முதல் 25-க் குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Vehicle Mechanic

காலியிடங்கள்: 293 சம்பளவிகிதம்: ரூ.19,000/- 63,200/-

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு -தேர்ச்சியுடன் Motor Mechanic /Diesel/Mechanic பாடத் இல் ITI படித்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Driver Mechanical Transport (OG)

காலியிடங்கள்: 16

சம்பளவிகிதம்: ரூ.19,900/- 63,200/-

வயதுவரம்பு: 18 முதல் 27-க் குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

Border Roads நிறுவனத் தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு. தொழிற்திறன்தேர்வு. உடற்தகுதி தேர்வு ஆகியவற் றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

மேற்கண்ட தேர்வுகள் புனேயில் வைத்து நடை பெறும். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவை யான கல்வித்தகுதியுடன் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 75 கெம் அகலம், விரிவடைந்த நிலை யில் 80 செ.மீ அகலம் இருக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.50. விண்ணப்பக் கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும்  முறை:

பணிக்கான விண்ணப் படிவம் பெறவும் கூடுதல் தகவல் பெறவும் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : http://bro.gov.in

இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் Acknowledgement Receipt உடன் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant, GREF. CENTRE,

Dighi. Camp, Pune - 411015

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.1.2022

Tags:    

Similar News