108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான வேலை வாய்ப்பு முகாம்
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 9ஆம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 9ஆம் தேதி (புதன்கிழமை) ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. 22 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். உயரம் 162.5 சென்டிமீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பி.எஸ்.சி, டி.ஜி.என்.எம் நர்சிங் மற்றும் பி.எஸ்.சி. சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி அவற்றில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர பிளஸ் டூ முடித்தவுடன் ஏ.என்.எம், டி.எப்.டி.என், டி.என்.ஏ, டி.எம்.எல்.டி அல்லது டி.பார்ம் படித்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும் மற்றும் Badge வாகனம் உரிமை எடுத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். இலகு ரக Badge கன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.14,996 ஊதியமாகவும் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.
வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்படுவார்கள். 12 மணி நேர ஷிப்டு முறையில் இரவு ஷிப்ட், பகல் ஷிப்ட் என வேலை செய்ய வேண்டியிருக்கும். மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக நேரில் கொண்டு வர வேண்டும். மேலும் இது தொடர்பாக 7418308513, 9944426044 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.