குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல் : எஸ்.பி அலுவலகத்தில் பெண் புகார்

தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் குளிப்பதை வீடியோ எடுத்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

Update: 2021-03-10 10:23 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் இன்று வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். நானும் எனது தாயாரும் வீட்டில் குளிக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்களுக்கு தெரியாமல் அதனை வீடியோ எடுத்து அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டினார்.

இதனால் பயந்து போன நான் அவரை வேலூர் ஓட்டேரி பகுதியில் சந்திக்கச் சென்றபோது என்னை அறையில் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார். அதை செல்போனில் படம் எடுத்து அந்த படத்தை என்னிடம் காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார். மேலும் மாதந்தோறும் மிரட்டி ரூ 10,000 பணம் பறித்தார்.

இதைப்பற்றி கடந்த நவம்பர் மாதம் புகார் கொடுத்தேன். அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர்  தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் வேலை பார்த்து வரும் மருத்துவமனைக்கு வந்து என்னை அவமானப்படுத்தி பாலியல் தொல்லை தருகிறார். நீ எங்கு போனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன் குடும்பத்தில் யாரையாவது வெட்டுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரிடமிருந்து என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News