தெற்கு மண்டல அளவிலான கபாடி போட்டியில் JKKN நர்சிங் கல்லூரி முதல் பரிசு பெற்று சாதனை..!

குமாரபாளையம் JKKN நர்சிங் கல்லூரி மாணவர்கள் தெற்கு மண்டல அளவிலான கபாடி போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-06-24 06:44 GMT

தெற்கு மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி போட்டியில் முதல் பரிசு வென்ற நர்சிங் கல்லூரி மாணவர்களை பாராட்டும் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

கடந்த ஜூன் 18ம் தேதி அன்று எடப்பாடி, ஆச்சார்யா மெட்ரிக் பள்ளியில் மாநில தெற்கு மண்டல அளவில் முதலமைச்சர் கோப்பை 2023  கபாடி போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாநில தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் பங்கேற்றன. பல சுற்றுகளாக நடந்த இந்த கபாடி போட்டியில் குமாரபாளையம், JKKN நர்சிங் கல்லூரி அணியில் மாணவர்கள், M. சந்துரு, (B.SC - மூன்றாம் ஆண்டு), ஸ்ரீ வெற்றிவேல் (B.SC - மூன்றாம் ஆண்டு), G. பிரவீன் குமார்.(B.SC - மூன்றாம் ஆண்டு), R. விக்ரம் (B.SC - மூன்றாம் ஆண்டு), E. சரவணா பாபு (B.SC - மூன்றாம் ஆண்டு),முகமத் பில்லா(B.SC - இரண்டாம் ஆண்டு) மற்றும் J.வினோ ஜீசஸ்(B.SC - முதலாம் ஆண்டு) ஆகியோர் வீரர்களாக பங்கேற்றனர்.

இந்த கபாடி போட்டியில் JKKN நர்சிங் கல்லூரி அணி வீரார்கள் சிறப்பாக விளையாடி எதிர் அணியினரை தோற்கடித்து முதல் பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை கபாடி போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களை அழைத்துப் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். அதேபோல JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா முதல் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி, வாழ்த்துக் கூறியதுடன், இன்னும் திறமைகளை வளர்த்து மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க உற்சாகப்படுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் JKKN கல்வி நிறுவனங்களின்  பள்ளி மற்றும் கல்லூரிகள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News