போன் போட்டா வீடு தேடி வரும் மளிகைப்பொருட்கள் : மக்களைத் தேடி மாநகராட்சி
ஒரு போன் பண்ணினாள் போதும் வீடு தேடி மளிகை பொருட்கள் வரும் என்று நெல்லை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
போன் போட்டா போதும் - உங்களைத் தேடி மளிகைப்பொருட்கள் வரும் - மக்களைத் தேடி மாநகராட்சி - ஆணையர் அறிக்கை
வீட்டில் இருந்தே தொலைபேசி வாயிலாக அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் பலசரக்குப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் .ஜி.கண்ணன் ஏற்பாடு "கொரோனா" வைரஸ் காய்ச்சலினை முற்றிலும் தடுப்பதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற சூழலில், 24.05.2021 முதல் 31.05.2021 வரையிலான காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கினை அறிவித்துள்ளார்.
இவ்வூரடங்கு காலத்தில், திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில், பொதுமக்களின் வசதிக்காக, சமூக விலகலைப் பின்பற்றிடும் விதமாகவும், மாநகரின் அனைத்துப்பகுதிகளிலும் நேற்றுவரை 120 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்களைத் தொடர்ந்து இன்று (25.05.2021) 68 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கன் என மொத்தம் 188 "நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள்" மூலமாக விநியோகிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜி.கண்ணன் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், 24.05.2021 முதல் 31.05.2021வரையிலான காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில், திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டே கைபேசி ஃ தொலைபேசி வாயிலாகவே அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் ஆர்டர் செய்து பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றுதெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட அங்காடிகளான (1) ஸ்ரீ நிவாசா நகரில் உள்ள ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 9487210411, 9566510411, 0462-2520411 என்ற தொடர்பு எண்களிலும், (2) திருநெல்வேலி டவுண் ஸ்ரீமுருகன் டிரேடர்ஸ் 9791554851, 9080502382, 9894507894 என்ற தொடர்பு எண்களிலும், (3) திருநெல்வேலி டவுண் அருணா சூப்பர் மார்க்கெட் 9366113355 என்ற தொடர்பு எண்ணிலும், (4) பாளையங்கோட்டை பாலன் சூப்பர் மார்க்கெட் - 7373058730, 8754028080 என்ற தொடர்பு எண்களிலும், (5) பாளையங்கோட்டை அன்னபூர்ணா பலசரக்கு கடை- 9894478007, 9600278231, 0462-2574875 என்ற தொடர்பு எண்களிலும், (6) திருநெல்வேலி டவுண் ளு.P.டிரேடர்ஸ் -9344560777, 7708536999 என்ற தொடர்பு எண்களிலும், (7) திருநெல்வேலி டவுண் போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் - 9585516512 என்ற தொடர்பு எண்ணிலும், (8) பாளையங்கோட்டை வசந்தம் சூப்பர் மார்க்கெட் - 9842077007, 9489707000, 6384149119 என்ற தொடர்பு எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக மேலும், (9) மேலப்பாளையம் டக்கரம்மாள்புரம் நெல்லை ப்ரஸ் சூப்பர் மார்க்கெட் - 9843054036, 9843454036, 9843154036, 9843354036 என்ற தொடர்பு எண்களிலும், மேலப்பாளையம் சிட்டி சூப்பர் மார்க்கெட் - 9585998908, 8682893680, 9940771307 என்ற தொடர்பு எண்களிலும், பெருமாள்புரம் பிக் பஜார் - 7010124207, 8637689270, 8451054151, 7304558608 என்ற தொடர்பு எண்களிலும், தச்சநல்லூர் G.R.M சூப்பர் மார்க்கெட் - 9943603004, 9943603005 என்ற தொடர்பு எண்களிலும், பெருமாள்புரம் A.P.P நாடார் ஸ்டோர்ஸ் - 7598223030, 7598423030 என்ற தொடர்பு எண்களிலும், திருநெல்வேலி டவுண் தளவாய் பட்ஜெட் -9786318088, 8012186589, 0462-4562333 என்ற தொடர்பு எண்களிலும், பாளையங்கோட்டை நாச்சியார் சூப்பர் மார்க்கெட் - 9994104488, 9488184444, 9944630333 என்ற தொடர்பு எண்களிலும், திருநெல்வேலி டவுண் P.S.P. டிரேடர்ஸ் -9443451974 என்ற தொடர்பு எண்ணிலும் மற்றும் P.S.P. எண்டர்பிரைசஸ் - 7639309463, 0462-2331624 என்ற தொடர்பு எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே கைபேசி ஃ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்காணும் அங்காடிகள் திருநெல்வேலி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே ஆர்டர் செய்த பொருட்களுக்கு டோர் டெலிவரி செய்வார்கள்.எனவே தளர்வுகளற்ற இவ்வூரடங்கு காலத்தில், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, பலசரக்குப் பொருட்களை பெற்றுக்கொள்ள மேற்காணும் தொடர்பு எண்களைப் பயன்படுத்தி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் பொதுமக்களை வேண்டிகேட்டுக்கொண்டுள்ளார்.