15 ஆண்டு திமுக ஆட்சிதான், மு.க.ஸ்டாலின்தான் முதல்வர்: அமைச்சர் புகழாரம்
தொடர்ந்து 15 ஆண்டு காலம் திமுக ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் என அமைச்சர் KKSSR புகழாரம்.;
தொடர்ந்து 15 ஆண்டு காலம் திமுக ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும் முகஸ்டாலின்தான் முதல்வர் என அமைச்சர் KKSSR புகழாரம்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் குத்துக்கல்வலசை தனியார் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சரும் தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான KKSSR ராமச்சந்திரன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றிபெற்றதை போல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் 100% வெற்றிபெற்று தளபதியிடம் வெற்றியை சமர்பிக்க வேண்டும் என்றும், தமிழத்தில் இன்னும் 15 ஆண்டுக்கு திமுக ஆட்சிதான் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஆட்சி செய்வார் என பெறுமிதத்துடன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தென்காசி நகர செயலாளர் சாதீர், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு, மாவட்ட பஞ்சாயத்துதலைவி தமிழ் செல்வி மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.