கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த காவலாளி

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் காட்டேரி ஏரியில் இறந்து கிடந்த காவலாளி உடலை மீட்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2024-04-18 07:00 GMT

ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்தவரின் உடலை போலீசார் மீட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் காட்டேரி எனப்படும் ஏரியில் இறந்து கிடந்தார் காவலாளி. உடலை மீட்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அமைந்துள்ளது காட்டேரி எனப்படும் ஏரி இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் ஏரியன் நடுவே ஆங்காங்கே சவுடு மண் கடத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீர் தேங்கியுள்ள பள்ளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சடலமாகக் கிடப்பதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை மீட்டு ஏரியின்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அருகாமையில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்தவர் என்பதும் அவர் சுண்ணாம்பு குளம் அடுத்த ஓபசமுதிரம், சாலை கண்டிகையை சேர்ந்த விஜி (42) என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து காவலாளி விஜி நள்ளிரவில் கும்மிருட்டு பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல கோணங்களில் ஆரம்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News