வாங்காத கடனுக்கு மாத தவணை தொகையை பிடித்தம் செய்ததாக போலீசில் புகார்

தனியார் நிதி நிறுவனத்தில் வாங்காத ரூ. 81 லட்சம் கடனுக்கு மாத தவணைத் தொகை பிடித்தம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2024-03-21 14:52 GMT

போலீசில் புகார் அளிக்க வந்த தம்பதியினர்.

தனியார் நிதி நிறுவனத்தில் வாங்காத ரூ. 81 லட்சம் கடனுக்கு மாத தவணைத் தொகை ரூ. 81 ஆயிரம் வங்கி கணக்கில் பிடித்தம் செய்ததால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர் குடும்பத்தினர்  நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். மன உளைச்சலால் தற்கொலை செய்யப்போவதாகவும் வேதனை தெரிவித்தனர். 

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரமள் பைனான்ஸ் நிறுவனத்தார் உத்திரவாதத்தை நம்பி நாங்கள் லோன் தருவதில்லை. உங்களை நம்பித்தான் லோன் தருகிறோம் என்ற வாசகத்துடன் வீடு கட்டுவதற்கான லோன் தருவதாக விளம்பரப்படுத்தியதையடுத்து செந்தில்குமார் தனது மனைவி ஈஸ்வரி பெயரில் வீடு கட்டுவதற்காக ரூ. 3 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆவணங்களை சரி பார்த்த பைனான்ஸ் ரூ.2 கோடி வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையில் ரூ.1.50 கோடியை 2 தவணைகளாக வழங்கப்படும் என தெரிவித்து முதலில் 69 லட்சத்திற்கான காசோலையை கடந்த ஜனவரி மாதம் வழங்கியுள்ளனர். இதனால் வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்கும் வகையில் வங்கியில் அதற்கான ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு மீதமுள்ள ரூ.81 லட்சத்தை வேண்டாம் என செந்தில்குமார் வங்கியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் லோன் கொடுக்க உத்திரவாதம் வந்ததாகவும் ரூ.81 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்த பைனான்ஸ் நிர்வாகத்தினர் வாட்ஸ் அப்பிலோ அதற்கான ஆவணங்களையோ, காசோலை நகலையோ எதிலும் அனுப்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் .கண்ணால் கூட ரூ. 81 லட்சத்திற்கான காசோலையை பார்க்காத நிலையில் தனக்கு உடன்பாடு இல்லை என கேர் சென்டரில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த மார்ச் மாதம் ரூ. 81 லட்சத்திற்கு மாத தவணைத் தொகையாக ரூ. 81 ஆயிரத்தை பைனான்ஸில் இருந்த வந்த இஎம்ஐ மூலம் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரமள் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது அங்கிருந்த பைனானஸ் அதிகாரிகள் குமார், பால்பாண்டி மற்றும் தீபக் ஆகியோர் செந்தில்குமாரை மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
அனைதது ஆவணங்களிலும் கையெழுத்து போட்டுவிட்டு சென்றிருப்பதால் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் மிரட்டியுள்ளனர்.  இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமார்  திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தன்னை மோசடி செய்த பிரமள் பைனான்ஸ் நிறுவனம் மீதும்  அதன் அதிகாரிகள் குமார், பால்பாண்டி மற்றும தீபக் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று புகார் கொடுத்தார்.  புகார் மனுவை விசாரித்த எஸ் பி விரைவில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News