Karnataka Police Constable-மனைவியை கொல்ல 230கி.மீ பயணித்த போலீஸ் கான்ஸ்டபிள்..!
பலமுறை போனில் அழைத்தும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த கான்ஸ்டபிள் கணவன் மனைவியைத் தேடி வந்து கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Karnataka Police Constable,Murder Charges,Wife,150 Calls,Bengaluru Crime
அதிர்ச்சியூட்டும் வகையில், கர்நாடகாவில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது 150 அழைப்புகளை புறக்கணித்ததற்காக தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று தகவல்கள் தெரியவந்துள்ளன.
அந்த போலீஸ் கான்ஸ்டபிள் கிஷோர்(32), சாமராஜ்நகரில் உள்ள ராமசமுத்திரத்தில் உள்ள சாமராஜநகர் கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். 11 நாட்களுக்கு முன்னர் தான் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Karnataka Police Constable
இந்த குற்றத்தை அதாவது தனது மனைவியை கொலை செய்யும் நோக்கத்திற்காக , கிஷோர், சாமராஜ்நகர் நகரத்தில் இருந்து, அவரது மனைவியின் பெற்றோர் வீடு அமைந்துள்ள ஹோஸ்கோட் வரை, 230 கிலோமீட்டர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பூச்சிமருந்தைக் குடித்த கிஷோர் ஆபத்தான நிலையில் ஹோஸ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவர் காவலில் எடுக்கப்படுவார் என்று போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். உயிரிழந்த கிஷோரின் மனைவி பிரதிபா(24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் திருமணம் நடந்தது.
Karnataka Police Constable
விசாரணையில், கிஷோர் கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதிபாவுக்கு போன் செய்து அவரை திட்டியதும், அதனால் அவரது மனைவி அழுது புலம்பியதும் தெரியவந்தது. இதைப் பார்த்த பிரதீபாவின் தாய், குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால், அவரது அழைப்புகள் எதையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கிஷோரிடமிருந்து 150 மிஸ்டு கால்கள் வந்ததை மனைவி பிரதிபா மறுநாள் (திங்கட்கிழமை )காலை பார்த்தபோது தெரிய வந்தது.
சிறிது நேரம் கழித்து, (திங்கள்கிழமை) காலை 11:30 மணியளவில், கிஷோர் தனது மாமியார் வீட்டிற்கு வந்து, முதல் தளத்தின் அறையின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளார். பின்னர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பிரதிபாவின் தாய் பலமுறை கதவைத் தட்டினார். ஆனாலும் கதவைத் திறக்கவில்லை. பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு கதவைத் திறந்து, வெளியே வந்த கிஷோர் தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக மாமியாரிடம் கூறினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Karnataka Police Constable
பிரதீபாவின் பெற்றோர் அவர்களது மகளைக் கொன்ற கிசொருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கான்ஸ்டபிள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.