கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி பெத்தி குப்பம் பகுதியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2024-08-13 09:45 GMT

கொள்ளை நடைபெற்ற வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே  வீட்டின் பூட்டை உடைத்து13 சவரன் தங்க நகைகள் 30 ஆயிரம் பணம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தை சேர்ந்தவர்  பேப்பர் ஏஜெண்ட் ரவி( வயது 58). இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்கள் ஈகுவார்பாளையத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்ற நிலையில்,ரவி காலை பேப்பர் சப்ளை செய்வதற்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ரவி வெளியே சென்று விட்டார்.


பின்னர் வேலை முடித்து ரவி காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது,வீட்டு கதவின் பூட்டை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவை கம்பியால் நீக்கி அதில் இருந்த 13சவரன் தங்க நகைகள், மற்றும் ரூபாய் 30,000 கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரவி

உடனடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News