ஆவடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே பள்ளி அளவில் முதலிடம் பெற்ற பட்டதாரி பெண் வேலை கிடைக்காத மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-12 09:51 GMT

தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா.

ஆவடி அருகே பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மகளான ஸ்வேதா (வயது 21 )என்பவர் செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரியில் பி.காம். பட்டபடிப்பு படித்து கடந்த ஆண்டு முடித்துள்ளார்.இதன் பின்னர் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முகம் தேர்வு சென்று வந்துள்ளார்.ஆனால் எதிலும் தேர்வாகாமல் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்துள்ளார்.

குறிப்பாக நேற்று அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்ற அவர் இதிலும் தேர்வாகாமல் வீடு திரும்பியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஸ்வேதா தாய் சுபாவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு உறங்குவதாக கூறி அறைக்கு சென்றுள்ளார்.இதனை தொடர்ந்து வீட்டிற்கு அவரது பெற்றோர் பார்த்தபோது மகள் சுவேதா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார் ,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் திருமுல்லைவாயல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வேதா பள்ளி மாணவியாக இருந்த போது தான் படித்த பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளார். அப்படிப்பட்ட திறமையான மாணவி பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பது வாழ்க்கையில் அவருக்கு நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. இந்த உலகில் உயிர்வாழ்வதற்கு பணம் அதாவது பொருளாதாரம் தேவை  தான். ஆனால் பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்கிற யதார்த்த உண்மையை புரிந்து கொண்டால் தற்கொலை எண்ணமே யாருக்கும் ஏற்படாது. அதற்கான புரிதல் ஏற்படும் வரை தற்கொலைகள் தவிர்க்க முடியாத ஒன்றாக தான் தொடரும்.

Tags:    

Similar News