திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் இருசக்கர வாகனத்துடன் கைது

திருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-09 08:48 GMT

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் அவர்கள் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளவேடு போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்த முயன்ற போது அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர்.

போலீசார் அவர்களை பின் தொடர்ந்து நீண்ட தூரம் துரத்தி பிடித்தது அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 7 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து வெள்ளவேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பாப்பா சதீஷ் ( வயது 24), பரத் ( வயது 18), என்பது தெரியவந்தது.


மேலும் கஞ்சா சப்ளை செய்த பொன்னேரி சோழவரம் பகுதி சேர்ந்த அவருடைய நண்பர்களான மகேந்திரன்( வயது 40), சந்தோஷ்குமர் ( வயது 24), யாம் ராஜ் ( வயது 25), ரோகித் ( வயது 23), உமேஷ் ( வயது 25) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய  இருசக்கர வாகனத்தையும்  பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சென்னை பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கான கஞ்சா பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வருவதால் அவர்களது ஆந்திர நெட்வொர்க் நபர்களையும் போலீசார் குறி வைத்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News