தெறிக்கவிட்ட 'ரோலெக்ஸ் சார்…'நன்றி சொன்ன சூர்யா… யாருக்கு..?

'விக்ரம்' படத்தில் தான் நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்துக்கு ஒப்பனை செய்த செரினாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.;

Update: 2022-06-11 17:05 GMT

கலைஞானி கமல்ஹாசன் தனது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம், ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றிநடை போட்டு வருகிறது. வசூலில் வியத்தகு சாதனை படைத்துவரும் 'விக்ரம்' இதுவரை 270 கோடியைக் கடந்து கொண்டிருக்கிறதாம். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாகமும் படம் வெளியான முதல்நாளைப் போலவே இன்னும் குறையாமல் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி ஆகியோர் படம் முழுக்க பயணம் செய்தாலும் படத்தின் இறுதிக் காட்சிகளில் மொத்தம் மூன்று நிமிடங்கள் மட்டுமே தோன்றும் நடிகர் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் படத்தில் தெறிக்கவிடும். 'விக்ரம் - 3'ன் தொடக்கம் இந்த கேரக்டர் என்கிற சிறப்பைத் தாங்கிய ரோலெக்ஸ் சார் கேரக்டர் மிரட்டல்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக சில நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த கதாபாத்திரத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அதோடு ரோலக்ஸ் கதாபாத்திரமாக மாற்றிய ஒப்பனை கலைஞருக்கும் பாராட்டு குவிந்தது.

படத்தில் நடித்ததற்காக சூர்யா ஒரு ரூபாய்கூட சம்பளமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருக்கும் ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வழங்கி அசத்தி வரும் கமல், ரோலக்ஸ் சாரான சூர்யாவுக்கு தான் கட்டியிருந்த ரோலெக்ஸ் வாட்சை வழங்கி மகிழ்த்தியுள்ளார்.


இந்தநிலையில், தனது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் தனது ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்து பாராட்டு மழை பொழிந்து வரும் நிலையில், சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ரோலெக்ஸ் லுக்கிற்கு நன்றி' என ஒப்பனைக் கலைஞர் செரினா டிக்ஸெரியாவுடன் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

படத்தில் ஆக்ரோஷமாக உடல் முழுக்க ரத்தம் தெறிக்க ஆக்ரோஷமாக ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, அதே மேக்கப்பில் புன்னகை பூத்த முகத்துடன் செரினா டிக்ஸெரியாவுடன் சூர்யா எடுத்துக்கொண்ட படம் வேற லெவல்.

Tags:    

Similar News