விஜய் ஆண்டனியின் அதிரடி திரில்லர் தமிழரசன்
இரண்டு வருடங்களுக்கு பிறகு திரைக்கு வருகிறது விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான தமிழரசன்;
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது, பல சுவாரஸ்யமான படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று இசைஞானி இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் 'தமிழரசன்'.
தமிழரசன் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் கவுசல்யா ராணி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கவுள்ளார். திமிரு புடிச்சவன் திரைப்படத்தினை தொடர்ந்து இத்திரைப்படத்தில் போலீஸ் பாணியில் நடிக்கவுள்ளார் விஜய்.
'கடவுள் மனுஷனோட விளையாட மாட்டான். மனுஷன்தான் மனுஷன் கூட விளையாடுவான்' என தொடங்குகிறது இந்த ட்ரெய்லர்.
இந்தப் படம் 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெரிய திரைகளில் வரவிருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக தள்ளிப்போனது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சமூக நலனிற்காக போராடும் மனிதனாக நடித்துள்ளார். சோனு சூட் மற்றும் சுரேஷ் கோபி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இதில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்
இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தமிழரசன்' திரைப்படம் டிசம்பர் 39 திரையரங்குகளில் வெளியாகும்
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பிசியான நடிகராக வலம்வருகிறார். தற்போது அவர் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.