Thunivu Update: வெய்ட் பண்றப்பவே வெறி ஏறுது: துணிவு பற்றி நடிகர்கள்
துணிவு படம் பற்றி அதில் நடித்த நடிகர்கள் பக்ஸி மற்றும் பால சரவணன் சில தகவல்களை தெரிவித்துள்ளனர்;
தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் அமராவதி மூலம் தான் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.
பின் இவர் தனது உழைப்பினால் உயர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல், கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக வரவேற்பை பெற்றது.
தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார்.
படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதோடு சில முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள பக்ஸ், பாலா சரவணன் ஆகியோர் கூறுகையில், இந்த படத்தில் அஜித் சார் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதற்கு முந்தைய படங்களின் போது அஜித் சார் யாருடனும் செல்பி எடுக்க அனுமதிக்கவில்லை என்ற குறை இருந்தது. ஆனால் இந்தப்படத்தில் இறுதிநாள் ஷூட்டிங் முடிந்த பிறகு அனைவருடனும் செல்பி எடுத்துக் கொள்வதாக கூறிய அஜித், கடைசி நாள் சூட்டில் முடிந்ததும் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வரை சுமார் 2,500 ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதுவும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் அனைவருடனும் சிரித்து பேசி படம் எடுத்துக் கொண்டார். நானே மூன்றுமுறை போய் எடுத்துக் கொண்டேன்.
இந்தப் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும். இதில் எல்லா அம்சங்களும் இருக்கும். இந்த படத்தில் மகாநதி சங்கர் மிக சிறப்பான பெர்பார்மன்ஸ் தந்துள்ளார். இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.
படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என தெரியவில்லை. இந்தப் படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்போது ஷூட்டிங் முடிவடையாததால் பொங்கலுக்கு வெளிவருகிறது என்று கூறினர்.