ஆங்கிலேயரின் ஆணவத்தை திரையில் கொண்டு வந்தவர்..!

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன்துரையாக நடித்து ஆங்கிலேயனின் ஆணவத்தை அப்படியே திரையில் கொண்டு வந்தார்.;

Update: 2024-07-29 05:12 GMT

 ஜாக்சன்துரையாக நடித்து புகழ் பெற்ற சி.ஆர்.பார்த்திபன்

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்ஜாக்சன்துரையாக நடித்து புகழ் பெற்றவர் சி.ஆர்.பார்த்திபன். சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த காட்சிகள், வசனங்கள் தற்போது வரை தமிழகத்தில் சக்கைபோடு போடுகின்றன. ஆங்கிலேயனின் ஆணவத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து சிவாஜிக்கே நடிப்பில் பெரும் நெருக்கடி கொடுத்திருப்பார்.

இவரது ஆணவத்தை கண்ட பலர் தியேட்டரிலேயே கொந்தளித்தனர். அந்த அளவு ஆணவ நடிப்பில் சக்கை போடு போட்டார். இப்போது வரை அந்த சீனில் நடித்தவர் ஒரு ஆங்கிலேயர் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் ஒரு தமிழர். அதுவும் நம்ம தமிழ்நாட்டுக்காரர். இவரது சொந்த ஊர் வேலூர். மேல்படிப்புக்காக 1946 இல் சென்னை வந்து லயோலா கல்லூரியில் படித்து, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியிலும் நாடகங்களில் நடித்தார். பட்டம் பெற்ற பின்னர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார்.

அங்கிருந்து கொண்டே ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு அப்ளை செய்தார். குமாஸ்தா வேலையோ வேறு ஏதேனும் ஒரு வேலையோ கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று காத்திருக்கிறார். அழைப்பு வந்தது நடிகராக. எவ்வளவு சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்க தலைமைச் செயலகத்தில் 82 ரூபாய் சம்பளம் என்று பதிலளித்தார். நாங்கள் 150 ரூபா சம்பளம் தரோம் நடிக்க வாங்க என்று சொல்ல யோசித்த படி சி.ஆர்.பார்த்திபன் இருக்க உடனே அவர்கள், ‘200 ரூபாய் தருகிறோம் என்று சொல்லி கடைசியில் ‘300 ரூபாய்’ என்ற பிறகு சரியென்று சிரித்துக்கொண்டே சொன்னார் சி.ஆர்.பார்த்திபன்.

பிறகென்ன நடிகன் தான் ஆனால் தமிழ் அல்ல முதல் படமே இந்தி திரைப்படம். திலீப் குமார் , தேவ் ஆனந்த் , பினா ராய் ஆகியோர் நடித்து (1955) ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளிவந்த இன்சானியத். அதன் பின்னர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வசனம் எழுதி எம்.ஜிஆர் நடித்த‘புதுமைப்பித்தன்’ படத்தில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு அண்ணனாக, நாடககோஷ்டித் தலைவனாக நடித்துள்ளார். இரும்புத்திரை’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ என தொடர்ந்து ஜெமினி கம்பெனிப் படங்களில் நடித்தார்.

‘அன்னையின் ஆணை’ மாதிரி வெளிப்படங்களிலும் நடித்தார். இவர் பழகிய ராஜாஜி, கலைஞர், எம்ஜிஆர் எல்லோரும் பின்னாளில் முதல்வரானார்கள். அதேபோல், என் டிஆருடன் தெலுங்கு படத்திலும் ஜெயலலிதாவுடன் ‘மூன்றெழுத்து’ படத்திலும் நடித்திருக்கிறார். எனவே ஐந்து முதல்வர்களுடன் பழகியவர் என்ற பெருமையையும் இவருக்கு உண்டு.

இந்தி, தமிழ், தெலுங்கு என 120 படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ஜெமினி கணேசனின் உற்ற நண்பராக திகழ்ந்தார். ’கோழி கூவுது’ முதலான படங்களில் நடித்தார். ‘அண்ணே அண்ணே’ பாடலில் இவர் நடித்தது இன்னும் இவரை பிரபலப்படுத்தியது.

Tags:    

Similar News