கோவை: பெண்களுக்கு வாரிசு படத்தின் ஸ்பெஷல் ஷோ
Thalapathy vijay varisu movie -கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாரிசு படத்தின் சிறப்பு காட்சியில், பெண்கள் உற்சாக நடனமாடி அசத்தினர்.;
Thalapathy vijay varisu movie -நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் கடந்த 11 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ஓடி வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் பார்வையாளர்களாக உள்ள சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர். கோவையை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சிறப்பு காட்சியை பார்க்க வந்திருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக நடனமாடி கைகளை தட்டி வாரிசு படத்தை கண்டு ரசித்தனர். பெண்களுக்கு மட்டும் நடைபெற்ற வாரிசு பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதேபோல் கேரளாவிலும் பெண்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த ஸ்பெஷல் காட்சியிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர்.