Thalapathy 68 Heroine-விஜயின் 68வது திரைப்பட ஹீரோயின் இவர்தானாம்..!

விஜயின் 68வது திரைப்படத்தில் கமிட் ஆகியிருக்கும் நடிகை மீனாட்சி செளத்ரி யார்? எந்த ஊர் போன்ற விபரங்களைப் பார்க்கலாம்.

Update: 2024-01-04 08:08 GMT

thalapathy 68 heroine-விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி (கோப்பு படம்)

Thalapathy 68 Heroine

விஜயின் 68 வது திரைப்படத்தில் நாயகியாக கமிட் ஆகியிருக்கும் நடிகை மீனாட்சி செளத்ரி என்பவர் ஆவார்.இவர் ஹரியானா மாநிலம் பஞ்சுக்லா பகுதியைச் சேர்ந்தவர்.1997ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பிறந்தார்.

Thalapathy 68 Heroine


மீனாட்சியின் செளத்ரி அப்பா ஒரு ராணுவவீரர். அம்மா இல்லத்தரசி. தன்வீர் செளத்ரி என்ற ஒரு சகோதரர் இருக்கிறார்.

டென்டல் சர்ஜரி படிப்பில், பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.படித்த இடம் நேஷனல் டென்டல் கல்லூரி பஞ்சாப்.

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். நீச்சல் மற்றும் பேட்மிண்டன் வீரர் ஆவார். 2018 ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.


Thalapathy 68 Heroine

தெலுங்கில் வெளியான இச்சாட வாகனமுலு நிலுப ராடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இதைத்தவிர சிங்கப்பூர் சலூன், தளபதி 68 ஆகிய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

சினிமா வாய்ப்பு:

மீனாக்‌ஷி சவுத்ரிக்கு பிபிசியின் அவுட் ஆஃப் லவ் வெப்சீரிஸில் 2020ம் ஆண்டு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், சினிமாவில் அறிமுகமானார். டோலிவுட்டில் கில்லாடி, ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே விலகிய நிலையில், இவர் தான் நடித்து வருகிறார். இந்நிலையில், தளபதி 68 படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.


ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்:

இன்ஸ்டாகிராமில் இவருக்கு தற்போது 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கொஞ்ச நாள் வரை குறைவான ஃபாலோயர்களே இருந்த நிலையில், தளபதி படத்தில் கமிட் ஆன உடன் அதிரடியாக இவருக்கு ரசிகர்கள் இவரை பின்தொடர்வதாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவாக ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை போட்டு இளைஞர்களை ஈர்த்து வரும் மீனாக்‌ஷி சவுத்ரி தான் தற்போது தளபதி ரசிகர்களின் நெக்ஸ்ட் கிரஷ் ஆக மாறியுள்ளார். 

Tags:    

Similar News