சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா: கோலிவுட்டில் டிரெண்டிங்

'வணங்கன்' படத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா படத்தில் நடிக்கவுள்ளார்

Update: 2022-08-23 07:30 GMT

'சூர்யா 42' இப்போது கோலிவுட்டில் டிரெண்டிங் டாபிக். UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் 'சூர்யா 42' நேற்று ராமாபுரத்தில் உள்ள அகரம் அறக்கட்டளையில் பூஜையுடன் தொடங்கியது.

விழாவில் இருந்து சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. திஷா பதானி நாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்த படம் இரண்டு பாகங்களாக பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. 10 மொழிகளில் வெளியிடப்படும் 'சூர்யா 42' ஒரு பான்-இந்திய திரைப்படமாக இருக்கும் .


பூஜையை தொடர்ந்து சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்து ஒரு வாரம் நடக்கவுள்ளது. அதன்பிறகு, படக்குழு செப்டம்பர் நடுப்பகுதியில் கோவாவுக்குச் சென்று அங்கு படப்பிடிப்பு 25 நாட்கள் நடைபெறும்.

மேலும் அடுத்த வாரத்தில் 'சூர்யா 42' க்கான பிரமாண்ட மோஷன் போஸ்டரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

'சூர்யா 42' படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிசாமியும், கலை இயக்குநராக மிலனும் பணியாற்றுகின்றனர். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியை கவனிக்கிறார். சிறுத்தை சிவாவின் அசோசியேட் ஆதி நாராயணா இப்படத்தின் எழுத்தாளராக பணியாற்றுகிறார், மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். 

Tags:    

Similar News