அஜித்தின் ஏகே 63 படத்தின் இயக்குநர் இவர் தானாம்
அஜித் நடிக்கும் ஏகே 63 படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது;
சினிமாவிற்கு வந்தது முதல், ஒரு படத்தை முடித்த பிறகு அடுத்த படம் பற்றிய பேச்சை துவக்குவதையே கொள்கையாக வைத்திருக்கும் அஜித், தற்போது தனது கொள்கையை தளர்த்தி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். ஏகே 61 படத்தின் ஷுட்டிங் 80 சதவீதம் முடிந்து இறுதிக்கட்ட ஷுட்டிங் புனேயில் துவங்கப்பட உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 13 ம் தேதி ஸ்ரீதேவியின் பிறந்தநாளன்று ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட போனி கபூர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளை விக்னேஷ் சிவன் ஏற்கனவே துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த சுதா கொங்கராவிடம், அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுதா கொங்கரா, பண்ணலாம். ஒவ்வொன்றாக பண்ணலாம். ஒரு படம் முடிக்க எனக்கு 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு படத்தை முடித்த பிறகு தான் மற்றொரு படத்தை துவக்க முடியும் என்றார். இதனால் சுதா கொங்கரா, அஜித்தை இயக்க போகிறார் என்ற தகவல் உண்மை தான் என தெரிகிறது.
தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா, இதற்கு பிறகு கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்தை இயக்க போவதாகவும், இதில் லீட் ரோலில் நடிக்க சிம்புவிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஒரு படத்தை முடிக்க 3 ஆண்டுகள் தேவைப்படுவதாக அவரே சொல்வதால் அஜித், சூர்யாவுடனான படங்களை எப்போது எடுப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்