சிம்புவின் திருமண சிக்கல்.. ஜாதகத்தை வைத்து காஞ்சியில் சிறப்பு பூஜையா ?

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின் பேட்டியளித்தார்.;

Update: 2022-12-06 13:30 GMT

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின் தகவல் தெரிவித்தார்.

திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் , இலட்சிய திமுக வின் நிறுவனமான டி ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை வலம் வந்து , கொடிமரம் அருகே விழுந்து மிகுந்து பயபக்தையுடன் தனது வேண்டுதலை கோரிக்கையாக வைத்தார்.

அதன் பின் மூன்று நெய் தீப விளக்கு ஏற்றி கொடிமரம் , மூலஸ்தானம் அமைந்த பகுதியை நோக்கி தீப பூஜை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 12 திருவிளக்கு ஏற்றி தனது வேண்டுதலை மனமுருகி வேண்டி க்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் , தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும் , கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில் , சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது.

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் திருமணம் குறித்த கேள்விக்கு , எனக்கு எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை , குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன்.

இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதும் , இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கின்றனர்.

மனிதனுக்கு ஜாதக கட்டம் சரியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பழமொழி போல் கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்தும் நன்றாக இருக்கும்.

எல்லா மதக் கடவுள்களையும் வணங்கும் எனது மத நம்பிக்கைக்கு தற்போது சிறப்பாக உள்ளதாகவும் , ஆட்சியைப் பற்றியும் ஆட்சியாளர்களை பற்றியும் தற்போது விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

ஆட்சியை உருவாக்கிய மக்களை யார் விமர்சனம் செய்வார்கள். நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறினால் ஏற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

தற்போது இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா பணநாயகம் இருக்கிறதா என்று கேட்டால், வாக்காளர்கள் தங்கள் வாழ்க்கை விற்கும் மனப்போக்கை கடை பிடிப்பததால் நாடு எவ்வழி போகும்.

உங்களுக்கு வாக்கு குறித்த வலிமை தெரியவில்லை எனவும், இந்த தேர்தலுக்கு நமக்கு என்ன தீரும் என்ற கவலையே மக்களிடம் உள்ளது.

தற்போது சினிமா மட்டுமல்ல அனைத்திலும் பிரச்சனை உள்ளது. மக்களின் மனநிலை மாற வேண்டும், அதுவரை எவர் குரல் கொடுத்தாலும் தற்போது எடுபடாது.

சேவைக்காக வாழ்ந்தது அந்தக் காலம் தற்போது தேவைக்காக வாழும் காலம் வந்துவிட்டது. ஜனநாயகத்தை மீறி  பணத்திற்காக வாக்களித்து வரும் நிலை மாற  படித்தவர்கள் கட்டாயம் வாக்களிக்க வர வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் லட்சிய திமுக மாவட்ட செயலாளர் மேகநாதன்‌,  வி.கே பொன்மொழி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News