சின்னக்குயில் சித்ரா பாடகியானது எப்படி.? உங்களுக்கு தெரியுமா..?

சினிமா இயக்குனர் பாசில் இசைஞானி இளையராவிடம் பரிந்துரை செய்து தான் பாடகி சித்ராவை பாட வைத்துள்ளார்.

Update: 2023-07-28 10:46 GMT

சின்னக்குயில் சித்ரா.

ஒரு நாள் தன் படத்தைப்  பற்றிப் பேச இசைஞானி இளையராஜாவை காண வந்த இயக்குனர் பாசில் “தனக்கு தெரிந்த கேரளாவை சேர்ந்த ஒரு பெண் நன்றாக பாடுவதாகவும் அவருக்கு  வாய்ப்பு அளிக்க வேண்டும்” என இளையராஜாவிடம்  வேண்டுகோள் வைத்தார்.

அவரும் ஆமோதிக்க அந்த பெண் இசைஞானியை சந்தித்து ஒரு தியாகராஜ கீர்த்தனையை பாடிக்காட்டினார். அதில் கவரப்பட்ட இசைஞானி, அந்த பாடகிக்கு வாய்ப்பு வழங்கினார். அந்த பெண் பாடிய முதல் பாடலே “பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது” பாடல்.

இந்த பாடல் இயக்குனர் பாரதிராஜாவின் “பச்சைக்கொடி” என்ற படத்திற்காக பதிவாக்கப்பட்டு பின் அந்த படம் கைவிடப்பட்டதால் “நீ தானா அந்த குயில்” படத்தில் வெளிவந்தது. அந்த பாடகி பாசிலின் முதல் படமான பூவே பூச்சூடவாவில் “சின்னகுயில் பாடும் பாடல் கேட்குதா” என பாடி அனைத்து ரசிகர்களின் மனதிலும் சின்னக்குயில் சித்ராவாக பதிந்து போனார்.

“உன்னை புகழ்ந்து பேசுபவர்களை விட உன்னிடம் உள்ள குறைகளையும் தவறுகளையும் சுட்டி காட்டுபவர்கள் தான் உண்மையில் நீ நன்றாக வர வேண்டும் என எண்ணுபவர்கள்” என அடிக்கடி என் தந்தை என்னிடம் கூறுவார். அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பதற்கு உதாரணம் இளையராஜா தான்.

அவருடைய இசையில் நான் பாடி முடித்து டேக் ஓகே ஆனாலும், ரெக்கார்ட் செய்யப்பட்ட அந்த பாடலை என்னை திரும்பவும் கேட்க வைத்து அதில் உள்ள குறைகளை என்னிடம் கூறும்படி  கேட்பார். அது எனக்கு அவர் கொடுக்கும் சுயபரிசோதனை. அப்படிக் கேட்டு கேட்டு அதில் உள்ள குறைகளை திருத்தம் செய்து அடுத்த முறை அந்த தவறு வராமல் பார்த்து கொள்வேன். அது என் வாழ்வில் மிகப்பெரிய படிப்பினை. என்னை இந்த அளவு மேம்படுத்தி கொள்ள அது பெரிதும் உதவியது.”

சித்ரா பாடியதில் ரிப்பீட் மோட்ல சலிக்காம கேட்டு ரசிக்கும் தனித்துவமான சில விருப்ப பாடல்கள்...

நானொரு சிந்து காவடி சிந்து...

பூவே பூச்சூடவா எந்தன்...

தேவனின் கோவில் மூடிய நேரம்...

காற்றோடு குழலின் நாதமே...

நின்னுக்கோரி வரணும் வரணும்...

ஏதேதோ எண்ணம் வளர்தேன் உன்...

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்...

வந்ததே ஓ...ஓ.. குங்குமம்...

தை பொங்கலும் வந்தது பாலும்...

மன்னன் கூரை சேலை மஞ்சம்...

போனஸ் பாடல்: மத்தாப்பூவு ஒரு பெண்ணா ஆகாதா..?  சினிமாவில் என்ன தான் புகழ் பெற்றாலும் தன்னடக்கம் அதிகம் நிறைந்த பாடகி சித்ராவை நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

Similar News