வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்புவின் மாஸ்டர் பிளான்
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா பற்றிய பரபரப்பு தகவல்;
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பால் அசத்தியவர் சிம்பு. இதைத்தொடர்ந்து அவரது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மன்மதன், வல்லவன் போன்ற மெகாஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கினார் சிம்பு.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள இப்படத்திற்கு மிக விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.
இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் மற்றும் ரஜினி கலந்து கொள்கிறார்கள் என பேசப்படுகிறது. அவ்வாறு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் மற்றும் ரஜினி வரும் பட்சத்தில் இவ்விழா அடுத்தகட்டத்துக்கு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருப்பினும் இதுவரை வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.