காதலித்த நடிகரை பிரிந்த பின்னும் வேறு படத்தில் ஜோடியாக நடிக்க சம்மதித்த நடிகை
சிம்புவுடனான காதல் முறித்த பிறகு, முன்னணி கதாநாயகியான பிறகு மீண்டும் அதே சிம்புவுடன் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு அழைப்பு வந்தது.
ஹரி இயக்கத்தில் சரத்குமார் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்த ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நயன்தாரா.
நயன்தாரா தமிழ் சினிமாவில் முதன்முதலாக அதிகம் அறிமுகமான படம் சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு முன்னரே சிம்புவுடன் தொட்டி ஜெயா படத்தில் அறிமுகமாக இருந்தவர்தான் நயன்தாரா.
தொட்டி ஜெயாவில் நயன்தாராவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது இயக்குநர் துரையும், கேமராமேன் ஆர்.டி. ராஜசேகரும் கோபிகாவுக்கு வாக்குறுதி அளித்துவிட்டனர். அதனால் நயன்தாராவை அந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. அந்தப் படத்தின் வாய்ப்பை தவற விட, பின்னர் தான் ஐயா படத்தின் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு அவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து சந்திரமுகி படத்தில் நடித்தார். முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார், அடுத்த படமே சூப்பர் ஸ்டார், யாருய்யா இந்த பொண்ணு என்று பலரையும் வியக்க வைத்தார். கஷ்டப்பட்டு உழைத்து கோலிவுட்டின் முன்னணி நடிகையானார் நயன்தாரா.
தொட்டி ஜெயாவில் மிஸ் ஆனாலும் அதன் பிறகு வல்லவன் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்தார். முதலில் நடிகர் சிம்புவை காதலித்தார் நயன்தாரா. அவருடன் வல்லவன் என்ற படத்தில் நடித்தார். படுக்கையறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என ஏகத்துக்கும் கிளாமர் காட்டி திணறடித்தார். சில ஆண்டுகள் அவர்களின் காதல் உறவு நீடித்த நிலையில் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் அவர்கள் தத்தமது படங்களில் கவனம் செலுத்தினர். சில ஆண்டுகள் அமைதியாக இருந்த, நயன்தாரா பின்னர் நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பல முகங்களை கொண்ட பிரபுதேவாவை காதலித்தார். அவர்களின் காதல் திருமணம் வரை சென்றது. இதைத்தொடர்ந்து பிரபுதேவாவுடனான காதலும் முறிந்தது.
காதல், தோல்வி, மீண்டும் காதல், மீண்டும் தோல்வி என தொடர்ந்து உறவு சிக்கல்கள் மிகுந்த வாழ்வு இருந்தாலும், ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டபோதும் அதிலிருந்து அவர் மீண்டு வந்த விதமும் அது அவர் தொழிலை பாதித்தபோது, மீண்டும் அவர் தன் இடத்தைப் பிடித்த விதமும் கவனிக்கப்பட வேண்டியவை.
அவர் முன்னணி கதாநாயகியான பிறகும் மீண்டும் அதே சிம்புவுடன் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பெரும்பாலும் மறுத்திருப்பார். ஆனால், நயன்தாரா 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தார். நயன்தாரா மற்றும் சிம்பு ஆகியோர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ப ஆளு படத்தில் சேர்ந்து நடித்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்தார்.
இந்த படத்திற்கு ஒளின்னர் சிலர் அவர்கள் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள், நயன்தாரா மீண்டும் மனம் மாறிவிடுவார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நயன்தாராவோ தொழில்முறையாக மட்டுமே அந்த வாய்ப்பை அணுகினார்.