Serial Actress Lavanya-பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது முல்லை மலர்ந்தாச்சு..!
Serial Actress Lavanya-பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவ்யா அறிவுமணி விலகியதை தொடர்ந்து லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.;
Serial Actress Lavanya-விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் ஹவர்சில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த கதை 'ஆனந்தம்' படத்தில் வருவது போல அண்ணன் தம்பி செண்டிமெண்ட் கதையாகும். குறிப்பாக ஆனந்தம் படத்தின் சீரியல் வெர்ஷன்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் என்று பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் பலர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக கதை வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி கூட்டுக்குடும்ப சரணாலயமாக ஒற்றுமையாக இருந்த அண்ணன்,தம்பிகள் தற்போது பண பிரச்னை காரணமாக கதிர், முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஓட்டல் துவங்கி நடத்துகிறார். தான் சொன்ன வாக்கை காப்பாற்றி, முல்லை மருத்துவ செலவிற்கான பணத்தை கொடுத்துவிட்டுத் தான் மறுபடியும் வீட்டுக்கு வருவேன் என உறுதியாக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அவருக்கு பக்க பலமாக கதிரின் மனைவி முல்லையும் கதிருக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்.
Serial Actress Lavanya, Pandian Stores Mullai, Pandian Stores, Kaavya Arivumani
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை ஆரம்பித்தபோது முல்லை கேரக்டரில் நடித்தவர் விஜே சித்ரா. அவரது நடிப்பால் முல்லை கேரக்டர் மிகவும் பிரபலமானது. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்தவர்கள் அதிகம். ஆனால், சித்ராவின் திடீர் மறைவால் , அவர் நடித்த முல்லை கேரக்டருக்கு காவ்யா அறிவுமணி நடிக்கத்தொடங்கினார். தொடக்கத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பின்னர் அவரது நடிப்பாற்றலால் முல்லையாக ஏற்றுக்கொண்டனர். மீண்டும் சீரியல் சூடுபிடிக்கத்தொடங்கியது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் காவ்யா அறிவுமணி நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் காவ்யா அறிவுமணிக்கு வெள்ளித்திரையிலிருந்து பட வாய்ப்புகள் வருவதால் காவ்யா 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து காவ்யா அறிவுமணியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவு செய்து விலகுவதை உறுதி செய்தார்.
Serial Actress Lavanya, Pandian Stores Mullai, Pandian Stores, Kaavya Arivumani
புதிய முல்லை யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் தவித்துவந்த நிலையில் சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தொடரவுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. சிப்பிக்குள் முத்து தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கத் துவங்கியுள்ளார். இன்றிலிருந்து அவர் நடித்த காட்சிகள் ஒளிப்பரப்பாகத் துவங்கியுள்ளன.
பார்ப்போம்..இனி முல்லையை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று. ஒரே கதைக்கு இத்தனை நாயகிகள் மாறியிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காகத்தான் இருக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2