ஒரு கையில் ட்ரிப்ஸ், மறுகையில் வொர்க் அவுட்: ஜிம்மில் கெத்து காட்டிய சமந்தா

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Update: 2022-11-14 07:09 GMT

ஜிம்மில் பயிற்சியாளருடன் சமந்தா 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நேற்று முன்தினம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சமந்தாவின் நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

யசோதா மருத்துவ த்ரில்லர் திரைப்படம் அதன் முதல் நாளில் உலகளவில் ரூ 3.5 கோடி வசூலித்துள்ளது.

இணையத்தில் குவிந்து வரும் பாராட்டு மழையின் இடையே, தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது ஜிம் பயிற்சியாளர் உடன் யசோதா வெற்றியை ஜிலேபி சாப்பிட்டு கொண்டாடியதை குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அந்த வீடியோவில் அவரின் கை மணிக்கட்டு பகுதியில், நரம்பில் மருந்து ஏற்றும் ட்ரிப்ஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. அந்த ட்ரிப்ஸ் கருவியுடன் அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரின் எடையை நாள் கணக்கில் குறித்துவைத்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

சமந்தா அவரின் பதிவில்,"எனக்கு பிடித்த ஜிலேபியை சாப்பிடும் வகையில், நான் ஒருபோதும் செயலாற்றவில்லை என எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் நினைத்துள்ளார். ஆனால், தற்போது, யசோதா படத்தின் வெற்றியை முன்னிட்டும், குறிப்பாக சிறப்பான ஆக்சன் காட்சிக்காகவும் இந்த ஜிலேபியை பரிசளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக எனக்கு நடந்த அத்தனை விஷயத்திலும் ஒரு பார்வையாளராக நீங்களும் (பயிற்சியாளர்) இருந்தீர்கள். நீங்கள் என்னை கைவிட்டுவிடவில்லை, நீங்கள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசிய சமந்தா, ஜுனைட் தனது உடல்நிலையின் உயர் மற்றும் தாழ்வு நிலைகளில் தன்னுடன் இருந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

"சில நாட்களில் படுக்கையில் இருந்து எழுவது கடினம். சில நாட்களில் நான் போராட வேண்டியுள்ளது. நான் கைவிட விரும்பும் நாட்களை விட நான் போராட விரும்பும் நாட்கள் மெதுவாக அதிகரித்து வருகின்றன. உயிருக்கு உடனடி ஆபத்தில் இல்லை. நான் எந்த நேரத்திலும் இறக்க மாட்டேன். ஆம், இது ஆட்டோ இம்யூன். நேரம் எடுக்கிறது. இது சோர்வாகவும் சோர்வாகவும் இருக்கிறது, ஆனால் நான் எப்போதும் ஒரு போராளி. நான் போராடப் போகிறேன்" என்று கூறினார்


மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டுவரும் போதும், சமந்தா தளர்ந்துவிடாமல் உடற்பயிற்சி செய்வது பலருக்கும் வாழ்வில் ஊத்வேகத்தை அளிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News